
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அச்சங்குளம் கிராமத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலையில் நேற்று (12.02.2021) ஏற்பட்ட வெடிவிபத்தில் நான்கு அறைகள் தரைமட்டமான நிலையில் உயிரிழப்பு என்பது 19 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகம் மட்டுமில்லாது தேசிய அளவிலான தலைவர்களும் இந்த சம்பவத்திற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். வெடிவிபத்தில் 30க்கும் அதிகமானோருக்குப் பலத்த காயமும்,பலருக்கு 80% தீக்காயமும் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவத்தில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டஇளம்பெண், 7 மாத கர்ப்பிணி பெண் உட்பட 19 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 2 பேரின் நிலைமை தற்போது கவலைக்கிடமாக உள்ளதால் இந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அச்சம் நிலவி வருகிறது.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்துஇந்த விபத்து சம்பவத்திற்கு தனது இரங்கலை கவிதைவடிவில்தெரிவித்துள்ளார். இதுகுறித்துஅவர் வெளியிட்டுள்ளட்விட்டர் பதிவில், 'மனிதர்கள் பட்டாசுகளை வெடிப்பதுபோய் - பட்டாசுகள் மனிதர்களை வெடிப்பது துயரமானது. அதனினும் பெருந்துயரம் மனித உயிர்களின் விலை சில லட்சங்கள் ஆகிப்போவது' எனஉருக்கமாகக்குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)