ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு வயது குழந்தைசுஜித்தின் மறைவுக்கு பல்வேறு தரப்பில் இருந்து இரங்கல் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

Advertisment

 vairamthu mourning poem for surjith

காணொளி வாயிலாக கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ளஇரங்கல் செய்தியில்,

உலகத்தின் நீளமான சவக்குழி இதுதானோ என்னவோ?

நடக்ககூடாதது நடந்தேறிவிட்டது

மரணத்தில் பாடம் படிப்பது மடமை சமூகம்

மரணத்திலும் கல்லாதது அடிமை சமூகம்

ஏ மடமை சமூகமே

வாழ்வின் பக்கவிளைவு மரணம் எனில் மரணத்தின்பக்கவிளைவு ஞானம்தானே?

அந்த சவக்குழிக்குள் மண் விழுவதற்குள் அத்தனை அபாயக் குழிகளையும் மூடிவிடு

அந்த மெழுகுவர்த்தி அணைவதற்குள் அத்துணைகண்ணீரையும் துடைத்துவிடு

ஏ வானம் பார்க்கும் தொழில்நுட்பமே சற்றெ குனிந்து பாதாளம் பார்

இந்த மரணத்தோடு முடியட்டும் பிஞ்சு சாவுகள்

என தெரிவித்தள்ளார்.