vaikunta ekadasi festivals temples peoples

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி தமிழகத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

Advertisment

உலக புகழ் பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ராப்பத்து உற்சவத்தின் முதல் நாளான இன்று (25/12/2020) அதிகாலை 04.45 மணிக்கு சொர்க்கவாசல் (பரமபதவாசல்) திறக்கப்பட்டது.108 வைணவத்திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பின் போது பக்தர்களுக்கு அனுமதியில்லை. காலை 08.00 மணிக்கு மேல் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பெருமாளை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisment

அதேபோல் திருவல்லிக்கேணி பார்த்த சாரதி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், திருப்பதி உள்பட பல கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கோயில்களில் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

கரோனா கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அனைத்து பக்தர்களும் தரிசிக்கும் வகையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முதல்முறையாக ஜனவரி 3- ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் திறந்திருக்கும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Advertisment