Vaikunda Ekadasi festival begins today at Srirangam temple

Advertisment

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக சொர்க்கம் என்று பக்தர்களால் அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கோவிலில் இன்று (03.12.2021) வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலமாக ஆரம்பமானது. நான்காம் தேதி சனிக்கிழமைமுதல் பகல் பத்து தொடங்குகிறது. அதுமுதல் நம்பெருமாள் காலை மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

பகல்பத்து பத்தாம் திருநாளான 13ஆம் தேதி நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளுவார். ராப்பத்து தொடக்க நாளான பத்தாம் தேதி அதிகாலை மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு நம்பெருமாள் 4.45 மணிக்கு சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசலைத் திறந்து கடந்து செல்வார். தொடர்ந்து நடைபெறும் இராப்பத்து 7ஆம் திருநாளன்று, 20ஆம் தேதி திருகத்தல சேவை நடைபெறும். வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், காவல்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர் இணைந்து செயல்படுத்திவருகின்றனர்.