vaiko kerala

கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தில் உள்ள கோட்டக்கல் ஊரில் உள்ளது கோட்டக்கல் ஆர்ய வைத்தியசாலை. கோட்டக்கல் ஆர்ய வைத்யசாலை என்பது, ஆயுர்வேதத்தின் அடிப்படையில் இயங்கும் மருத்துவமனை. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இம்மருத்துவமனையில் 17 நாட்கள் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளார். இந்த சிகிச்சை நிறைவு பெற்று புத்துணர்வுடன் அவர் ஊர் திரும்புவதாக தகவல்.