Advertisment

காவிரி பிரச்சனைக்காக வைகோவின் மைத்துனர் மகன் தீக்குளிப்பு - மார்க்சிஸ்ட் அதிர்ச்சி

vaiko fire

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மைத்துனர் மகன் தீக்குளிப்பு சம்பவம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை:

Advertisment

’’மத்திய அரசு காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு இழைத்து வரும் துரோகத்தை கண்டித்து தமிழக மக்கள் ஒன்றிணைந்து ஆவேசமாக போராடி வரும் நிலையில், சிலர் உணர்ச்சி வயப்பட்டு தங்களது உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சிப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. குறிப்பாக, நேற்று வைகோவின் மைத்துனர் மகன் சரவண சுரேஷ் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார் என்பது பேரதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. தங்களது கருத்தை தெரிவிக்க எண்ணற்ற போராட்ட வழிகள் இருக்கும்போது தற்கொலை முயற்சியை யாரும் மேற்கொள்ளக் கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

Advertisment

தமிழக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மத்திய அரசை பணிய வைப்பதே இந்த பிரச்சனைக்கு தீர்வாக அமையும். எனவே தமிழக மக்கள் தனிமனித உணர்ச்சி கொந்தளிப்பிற்கு இடம் அளிக்காமல், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான போராட்டத்தினை வெற்றியடையச் செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.’’

brother Cauvery problem fire vaiko
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe