இலங்கையில் முள்ளி வாய்க்கால் நினைவுச் சின்னம் இடிக்கப்பட்டதைக் கண்டித்து ம.தி.மு.க. சார்பில், சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தைமுற்றுகையிட்டுப் போராட்டம் நடைபெற்றது.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்முத்தரசன், மதிமுகதுணைப் பொதுச் செயலாளர்மல்லை சத்யா, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், மே 17 இயக்க திருமுருகன் காந்தி, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, விடுதலைச் சிறுத்தைதுணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, இயக்குனர் கெளதமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். போராட்டத்தின் முடிவில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.