எமனோடு போராடுகிறார், எமனையும் ஜெயித்து மீண்டு வருவார் கலைஞர் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் உடல்நலம் விசாரிக்க இன்று காலை காவேரி மருத்துவமனை வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அங்கு கலைஞர் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலின், கனிமொழியிடம் விசாரித்தார். பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது,
ஒரு (மெடிக்கல் மிராக்கல்) மருத்துவ அதிசயமாக, டாக்டர்கள் சிகிச்சை அளித்தாலும் தானாக அதிலிருந்து மீண்டு விட்டார் என்பது பெரிய அதிசயம். வாழ்நாள் எல்லாம் தமிழர் நலனுக்காக, தமிழ்நாட்டு நலனுக்காக பல சக்திகளை எதிர்த்து போராடியிருக்கிறார். அடக்குமுறைகளை எதிர்த்து போராடியிருக்கிறார். பலமுறை சிறைவாசம் கண்டிருக்கிறார். இப்போது எமனோடு போராடுகிறார்! எமனையும் ஜெயித்து மீண்டு வருவார் கலைஞர் என அவர் கூறினார்.
Follow Us