Advertisment

"பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்களின் இடமாற்ற உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்!" - வைகோ!

bjk

Advertisment

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரங்கராஜ், ரஞ்சித் மற்றும் அசோக் ஆகிய மூன்று காவலர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதன் பின்னனியில், அவர்கள் கறுப்புச் சட்டை அணிந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சம்பவம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தச் சம்பவத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும் வி.சி.க தலைவர் திருமாவளவன் இதுதொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ இந்தச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், "பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்கள் இடமாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

vaiko
இதையும் படியுங்கள்
Subscribe