தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் இன்று (05/05/2022) சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ, இலங்கையில் வாடும் மக்களுக்கு உதவிடும் வகையில் நிதியுதவி வழங்கிட முதலமைச்சர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 13 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.
இந்த நிகழ்வின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கணேசமூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் கு.சின்னப்பா, எம்.பூமிநாதன், ரகுராமன், சதன் திருமலைகுமார், ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, தலைமைக் கழக செயலாளர் துரை வையாபுரி ஆகியோர் உடனிருந்தனர்.