ko

திருப்பூர் வந்த பிரதமர் நரேந்திரமோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ‘மோடியே திரும்பிப்போ!’ என்று கோஷமிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தி, கருப்புக்கொடி காட்டி வைகோவும் அக்கட்சியினரும் கைதானார்கள்.

Advertisment

ko

அந்த நேரத்தில், போராட்டம் நடந்த அண்ணாசாலை பகுதிக்கு பா.ஜ.க. மகளிரணியைச் சேர்ந்த சசிகலா என்பவர் வந்தார். வைகோ பேசிக்கொண்டிருக்கும்போது, “பாரத் மாதா கி ஜே!” என்று உரக்கக் கத்தினார். இதனால் ஆத்திரமடைந்த அக்கட்சியினர், கருப்புக்கொடி மற்றும் கட்சிக்கொடி கட்டியிருந்த சிறு கம்பால் அவரைத் தாக்க முயற்சித்தனர். ஆனாலும், சசிகலா தொடர்ந்து ஆவேசம் காட்டினார். சசிகலாவை கட்சித் தொண்டர்களின் தாக்குதலிலிருந்து காப்பாற்றியது காவல்துறை.

Advertisment

sa