பா.ஜ.கவுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக பிரதமர் மோடி 10ந் தேதி மாலை திருப்பூர் வருகிறார்.
மோடி தழிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியாரிய அமைப்புகள் மற்றும் ம.தி.மு.க. கருப்புக்கொடி கண்டன போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று மாலை திருப்பூரில் நாளை போராட்டம் நடத்தும் இடத்தை நேரில் வந்து பார்வையிட்டார் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வை.கோ.
ம.தி.மு.க.சார்பில் GO Back Modi என எழுதப்பட்ட பதாகைகள், ராட்சத பலூன்கள் பறக்க விடுவது கருப்புக்கொடிகளை காட்டுவது என பல போராட்ட திட்டங்களை கட்சி நிர்வாகிக்கு விளக்கி கூறினார் வை.கோ.