முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்திந்து பேசினார். திமுக தலைவராக 2வது முறையாக தேர்வு செய்யப்பட்டதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் துரை.வைகோ, கனிமொழி, ஐ.பெரியசாமி, பொன்முடி, மல்லை சத்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.