திமுக கூட்டணியில் மாநிலங்களவை தேர்தலில் மதிமுக சார்பில் மதிமுக பொதுச்செயலாளர்வைகோ போட்டியிடுவார் என கூறப்பட்ட நிலையில் அவர் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் நடந்த மதிமுக உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவிற்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே திமுக சார்பில் இருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர்.இந்நிலையில் மதிமுக சார்பில் யார் போட்டியிடுவார் என எதிர்பார்ப்பு மேலோங்கியிருந்தது. இந்நிலையில் இன்று நடந்த மதிமுகஉயர்நிலைக்குழுகூட்டத்தில் வைகோ போட்டியிடுவார் எனஒருமனதாக முடிவெக்கப்பட்டுள்ளது.