Skip to main content

எடப்பாடி பழனிச்சாமிக்கு தைரியமிருந்தால் தூத்துக்குடிக்கு சென்று வருவாரா...? வைகோ கேள்வி! 

Published on 03/06/2018 | Edited on 03/06/2018
vaiko


தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்து சிதம்பரம் அருகேயுள்ள பெரியாண்டிக்குழியை சேர்ந்த ஜெகன் சிங் என்கின்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சி இளைஞர் நேற்று முன்நாள் தீக்குளித்து உயிர் நீத்தார்.
 

இந்நிலையில் சிதம்பரம் பு.முட்டூர் கிராமத்தைச் சேர்ந்த மன்சூர் அலி எனும் இளைஞர் வேல்முருகன் கைதைக் கண்டித்து நேற்று தீக்குளித்து உயிருக்கு ஆபத்தான நிலையில், புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தி செய்தி கேள்விப்பட்டு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ புதுச்சேரி சென்று  ஜிப்மர் மருத்துவமனையில் மன்சூர் அலியைப் பார்த்தார்.
 

பின்னர் செய்தியாளர்களிடம் வைகோ கூறுகையில், “மன்சூர் அலியின் முகம், மார்பு முழுவதும் வெந்து கருகியுள்ளது. சுயநினைவு இல்லை. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஜெகன்சிங் மரணத்திற்கும், மன்சூர் அலி தீக்குளிப்புக்கும் தமிழக அதிமுக அரசும், காவல்துறையும்தான் பொறுப்பு ஆவார்கள். இளைஞர்கள் எதற்காகவும் தாமே உயிரை மாய்த்து கொள்ளக்கூடாது. எதிர்த்து போராட வேண்டும். 
 

தூத்துக்குடியில் அரசும், காவல் துறையும் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்தி, துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை கொன்றது. காவல் துறையை கையில் வைத்துக்கொண்டு மிரட்டுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. அவருக்கு தைரியமிருந்தால் தூத்துக்குடிக்கு சென்று வரட்டும், பார்க்கலாம்" என்றார். 
 

மேலும் தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்தனர் என ரஜினி போன்றவர்கள் கூறுவது குறித்து கேட்டதற்கு, "இது போன்ற உளறல்களுக்கு பதிலளிக்க தேவையில்லை. இந்த உளறல்களை தூத்துக்குடிக்கு சென்று கூறட்டுமே... பார்க்கலாம்"  என்று கூறினார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

விசாரணைக் கைதி மரணம்; எடப்பாடி பழனிசாமி கண்டனம்!  

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tiruvallur incident Edappadi Palaniswami condemned

விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள  எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையில் காவல்துறை விசாரணைக் கைதி சாந்தகுமார் என்பவர் காவல்நிலையத்தில் உயிரிழந்ததாகவும், பிரேத பரிசோதனையில் அவர் உடம்பில் ரத்தக்கட்டு, வீக்கம் உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வருகின்ற செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே தமிழ்நாட்டில் காவல் மரணங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், இதுவரை அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவல் மரணங்கள் குறித்த திரைப்படங்கள் மட்டும் பார்த்துவிட்டு தன் மனம் அதிர்ந்து போனதாக நீலிக்கண்ணீர் வடிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனம். பொதுமக்களிடமும், விசாரணைக் கைதிகளிடமும் சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்டு மட்டுமே நடந்துகொள்ள வேண்டுமென காவல்துறையினரையும், அதற்கான உரிய உத்தரவுகளை காவல்துறைக்கு பிறப்பிக்குமாறு முதல்வரையும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.