Advertisment

கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை; அமைச்சர்கள் கருத்துக்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை - வைகை செல்வன் விளக்கம்!

jkl

அ.தி.மு.க.வில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு செல்லூர் ராஜூ பதிலளித்ததிலிருந்து, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அமைச்சர் ஜெயக்குமார் என ஒவ்வொருவரும் தங்களது கருத்துகளைக் கூறிவருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் இந்த விவாதத்தில் பங்கேற்றனர். இந்த "ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு ராயப்பேட்டை தலைமை அலுவலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கே.பி.முனுசாமி, அ.தி.மு.க.வில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. உள்ளது என பா.ஜ.க. தலைவர் முருகனே கூறிவிட்டார். சட்டமன்றத் தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டன. சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வது குறித்து தற்போது ஆலோசனை மேற்கொண்டோம். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் உரிய ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்" என்றார். இந்நிலையில் இதுதொடர்பாக தற்போது கருத்துத் தெரிவித்துள்ளஅ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் வைகை செல்வன் அமைச்சர்கள் தெரிவிக்கும் கருத்துகள் அவர்களின் சொந்தக் கருத்துகள், அதற்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை. மேலும், தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisment

admk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe