Advertisment

''வைகைப்புயல் வைகைப்புயல்'னு சொல்றாங்க ஆனா...''- விஜய் பாணியில் குட்டிக்கதை சொன்ன வடிவேலு!

Vadivelu told a short story in the style of Vijay

இயக்குனர்ஷங்கர்உடனான பிரச்சனையை அடுத்து நடிகர் வடிவேலு நடிக்கரெட் கார்டுவிதிக்கப்பட்டிருந்த நிலையில், அண்மையில் அந்த தடை நீக்கப்பட்டது. அதனையடுத்து தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க இருப்பதாக நடிகர் வடிவேலு தெரிவித்திருந்தார். இந்நிலையில் சென்னையில் புதிய திரைப்படத்தின் தொடக்க விழாவில் நடிகர் வடிவேலு பேசுகையில்,''வைகைப்புயல்வைகைப்புயல்'னுசொல்கிறார்கள். ஆனால் என் வாழ்க்கையில் ஒரு பெரிய சூறாவளியேஅடிச்சுருச்சி. அடிக்கடி கதைஒன்றைசொல்வேன். ஒரு பத்திரிகையில்கூடசொல்லி இருக்கிறேன். ஒரு நோயாளி ஒருடாக்டரிடம்சென்று, ஐயா மனசே சரியில்லை... நிம்மதி இல்லை... தூக்கமே வரவில்லை... எனக்கு ஏதாவது ஒரு மருத்துவம்பண்ணுங்கஎனகேட்டுள்ளார். அதற்கு அந்தடாக்டர்சொல்லிருக்காரு,இன்னைக்குசனிக்கிழமை நாளைக்கு ஞாயிற்றுக்கிழமைநீங்கதிங்கட்கிழமை வாங்க நான் உங்களுக்கு ஒருட்ரீட்மென்ட்எடுக்கிறேன் எனசொல்லிருக்கார். அதற்கு நோயாளி, எனக்கு உண்மையிலேயே தூக்கமே வரமாட்டேங்குது. நிம்மதி இல்லை என்னை நீங்கதான்காப்பாத்தணும்ஏதாவது ஒருட்ரீட்மென்ட்இப்பவேஎடுங்கஎன்றார்.

Advertisment

நீங்கதிங்கட்கிழமைவாங்கனுதிரும்பவும் அந்தடாக்டர்சொல்ல, இல்ல சார்என்னாலமுடியாது. கண்டிப்பா நீங்க எனக்குஇன்னைக்குதான்ட்ரீட்மென்ட்எடுக்கனும்'னுஅந்த நோயாளிசொல்லிருக்காரு.அப்போஅதுக்குஅந்தடாக்டர்சொல்லிருக்காரு, நீங்கஒன்னுசெய்யுங்க, பக்கத்துலஒருசர்க்கஸ்நடக்குது.அங்க ஒரு பபூன் பிரமாதமாகாமெடிபண்றாரு.அங்கபோறதுக்காகநானும் என் மனைவியும்ரெண்டுடிக்கெட்எடுத்துவைச்சுருக்கோம். என் மனைவிடிக்கெட்டைஉங்களுக்குதருகிறேன். நீங்களும் நானும் போய் அந்தசர்க்கஸைபார்ப்போம். அதில் அந்த பபூன் செய்றகாமெடியைபாத்துட்டீங்கனாஉங்கமனசுலஇருக்குறபாரமெல்லாமல்இறங்கிடும். அதுக்கப்புறம்நல்லாஇருக்குஎனகூறியிருக்கிறார். அதற்கு நோயாளி சொல்லியிருக்கிறார், அந்த பபூனேநான்தான்னு. கிட்டத்தட்ட அந்த அளவுக்குத்தான் நான் வாழ்ந்தேன். எனக்கு மட்டுமல்ல இதற்கிடையில் கடந்தநாலுவருஷமாநடிக்காம இருந்தது மட்டுமில்லாமஉலகத்தில் உள்ள அத்தனை மக்களுக்கும்கரோனாஎன்னும் கொடுமையான நோய் வந்து,தம்பியஅண்ணன் பாக்கமுடியல, தாய மகன் பாக்கமுடியல,மனைவியைகணவன் பாக்கமுடியல.வெளிநாட்டில் இருந்தால்தான் விசா கிடைக்காது.ஆனாஇப்போஅடுத்ததெருவுல, அடுத்த வீட்டில் ஒருவர் இறந்தால் கூட, ஏன் கணவனை இழந்தால் கூட மனைவி மாடியில்இருக்கணும். சீக்கிரம்எடுத்துட்டுபோங்க என் பிள்ளைகளுக்கு வந்திடபோகுதுஅப்படினுபயந்து நடுங்கும் காலம்.இதனால் இந்த பிரச்சனையில் என்னுடைய பிரச்சனை சாதாரண பிரச்சினை ஆகிவிட்டது'' என்றார்.

Advertisment

tamil cinema story vadivelu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe