ADVERTISEMENT

''முதல்வருக்கு நன்றி'' கரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினார் வடிவேலு!

07:04 PM Jan 01, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் தீவிரமாக இருந்த கரோனா தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, தமிழ்நாட்டில் முக்கிய நபர்களுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

அந்தவகையில் நடிகர் வடிவேலுக்கு கடந்த 24 ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இயக்குநர் சுராஜ் நடிகர் வடிவேலுவை வைத்து 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' என்ற படத்தை இயக்கி வருகிறார். லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சென்னை திரும்பிய நடிகர் வடிவேலுக்கு லேசான சளி, இருமல் இருந்ததால் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் சிகிச்சை முடிந்து நடிகர் வடிவேல் முழுமையாகக் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து தற்போது வீடு திரும்பியுள்ளார். மக்கள் ஆசீர்வாதத்தால் கரோனாவிலிருந்து மீண்டு நான் நலமாக உள்ளேன், மூன்று நாட்கள் தனிமையில் இருக்க மருத்துவர் அறிவுறுத்தியதாக தெரிவித்துள்ள நடிகர் வடிவேலு, ''என்னிடம் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோருக்கு நன்றி'' எனவும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT