Advertisment

"வடிவேலுவால் 14 கோடி ரூபாய் நஷ்டம்" - தயாரிப்பாளர் சதீஷ்குமார்

நகைச்சுவை நடிகர் வடிவேலு எலி திரைப்படத்தில் நடித்த போது, அந்த படத்தின் தயாரிப்பாளர் சதீஷ்குமாருக்கு, தனது நண்பர் ராம்குமாரிடம் ஒன்றரைக்கோடி ரூபாய் வாங்கிக்கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த பணத்தை திருப்பி கொடுக்காததால் வடிவேலு கொலை மிரட்டல் விடுத்ததாக சதீஷ் குமார் தரப்பில் மதுரை கே புதூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

vadivelu-Producer Satish Kumar-issue

இந்நிலையில், தயாரிப்பாளர்சதீஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, எலி திரைப்படத்தில் நடிகர் வலுவேலுவை நடிக்க வைத்து 10 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தமிழ்திரையுலகில் பல படங்கள் நடிகர் வடிவேலுவால் பிரச்சனை ஆகி பாதியில் நிற்கிறது. என்னுடைய வீட்டிற்கு நடிகர் வடிவேலுவின் உறவினரான மணிகண்டன் சென்று தகராறு செய்துள்ளார். மொத்தம் 14 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நஷ்டத்திற்கு ஈடாக 2 படங்கள் நடித்து தருவதாக கூறினார்.

ஆனால் அதை செய்யவில்லை. சம்பள பிரச்சினையை பேசித்தீர்த்துக்கொள்வோம் என கூறுகிறேன். நீதிமன்றமும் பேசி தீர்க்கவே கூறியுள்ளது. ஆனால் நடிகர் வடிவேலு என்னையும், என் குடும்பத்தினரையும் மிரட்டி வருகிறார். தகாத வார்த்தைகளில் பேசி வருகிறார். நடிகர் வடிவேலுக்காக மட்டுமே சினிமா நிறுவனத்தை தொடங்கினேன். அவருக்கு இருந்த நல்ல பெயரால் அவரை முழுமையாக நம்பினேன். தற்போது நடிகர் வலுவேலுக்கு சம்பள பாக்கி இருப்பதால் நடிகர் வடிவேலுவின் உறவினரான மணிகண்டன் என்பவர் பணம் கேட்டு மிரட்டுகின்றனர்" என்று கூறினார்.

satishkumar Producers vadivelu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe