Advertisment

என்னடா குறுகுறுன்னு பார்க்கிறே..? வடிவேலு பட பாணியில் மூக்குடைக்கப்பட்ட சகோதரர்கள்!

திருமண மண்டப பந்தியில் சாப்பிடும் போது "தங்களை குறுகுறுன்னு பார்த்ததாக" இருவரை தாக்கி மூக்குடைத்து அனுப்பியுள்ளனர் மூவர். நடிகர் வடிவேலு படத்தில் வரும் காட்சி போல் நடந்த இச்சம்பவத்தால் மண்டபமே பரப்பரப்புக்குள்ளானது.

Advertisment

vadivelu film

dsr222

சிவகங்கை மாவட்டம் ஆறாவயல் காவல்சரகம் ஊரிவயலை சேர்ந்தவர்கள் ராமச்சந்திரனும், சுதாகரும். இதே ஊரினை சேர்ந்தவர்கள் செந்தில்குமார், ராமன் மற்றும் பிச்சை ஆகியோர். பெண்ணை கேலி செய்த வழக்கில் இருதரப்பிற்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த 3ந் தேதி அன்று சாக்கோட்டை காவல் சரகத்திற்குட்பட்ட உமையாம்பிகை கோவில் திருமண மண்டபத்தில் நடைப்பெற்ற திருமணத்திற்கு ராமச்சந்திரனும், சுதாகரும் வந்திருக்கின்றனர். அதுபோல் செந்தில்குமார் தரப்பும் அங்கு வந்துள்ளது.

Advertisment

நடிகர் வடிவேலு நகைச்சுவை போல், பந்தி நடைபெறும் வேளையில் சுதாகரும், ராமச்சந்திரனும் தங்களை "குறுகுறுன்னு பார்த்ததாக" தாக்க தொடங்கியிருக்கின்றது செந்தில்குமார் தரப்பு. இதில் சுதாகருக்கும், ராமச்சந்திரனுக்கும் மூக்குடைந்துள்ளது. மண்டபத்தில் நடந்த கைகலப்பால் மண்டபமே அல்லோகலபட, மூக்குடைப்பட்டவர்களில் ஒருவரான சுதாகர் சிவகங்கையிலுள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ராமச்சந்திரன் சாக்கோட்டை காவல்நிலையத்தில் புகாரினை அளித்துள்ளார். இந்த புகாரையடுத்து கடந்த 5ம் தேதியன்று செந்தில்குமார் தரப்பு மேல் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

brother incident film vadivelu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe