கரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழ்நாட்டில் இன்று (23/01/2022) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரசித்திப் பெற்ற சென்னை வடபழனி முருகன் கோயிலில் இன்று (23/01/2022) திட்டமிட்டப்படி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இன்று காலை 10.00 மணி முதல் 11.00 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
கரோனா காரணமாக, கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை. 108 சிவாச்சாரியார்கள், கோயில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் மட்டும் கும்பாபிஷேக விழாவில் அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்காக வடபழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தை சமூக வலைதளங்கள், தொலைக்காட்சிகளில் நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகத்தையொட்டி, கோயில் முழுவதும் பலத்த காவல்துறை பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.