Vadapalani cannabis case!

சென்னை நொளம்பூர் சுதர்சன், பாடி அரவிந்த் ஆகிய இளைஞர்கள் வடபழனி அருகே காரில் ஒரு கிலோ 100 கிராம் எடையுள்ள கஞ்சாவை எடுத்து சென்றுள்ளனர். அப்போது சோதனையில் ஈடுபட்டிருந்த வடபழனி காவல் நிலையத்தினரிடம் சிக்கிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.

Advertisment

இந்த வழக்கின் விசாரணை, சென்னை போதைப் பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி வி.தேன்மொழி முன் நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், கஞ்சாவை காலை நேரத்தில், உதவி ஆய்வாளர் பறிமுதல் செய்த நிலையில், காவல் நிலைய ஆவணங்களின்படி மாலை நேரத்தில், ஆய்வாளர் பறிமுதல் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.இதில், பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. இந்த முரண்பாடுகளும், முறையாகக் கையெழுத்து போடாததும் சந்தேகங்களை ஏற்படுத்துவதாக உள்ளது. சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு குற்றச்சாட்டை நிரூபிப்பதில் கவனக்குறைவாக இருந்துள்ளதால், குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் விடுதலை செய்வதாக தீர்ப்பளித்துள்ளார்.

Advertisment