கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் அருகில் உள்ள ராசாக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்.தேமுதிக ஊராட்சி செயலாளரான இவர் நேற்று முன்நாள் இரவு அவருடைய வயல்வெளியில் உறங்கிக் கொண்டிருந்தார்.அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை வெட்டி கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர்.

Advertisment

m

அதிகாலையில் கிராம மக்கள் அவ்வழியாக சென்ற போது ரத்த வெள்ளத்தில் இருந்த செந்தில்குமாரை குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த செந்தில்குமாரை மேல் சிகிச்சைக்கு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் உயிரிழந்தார்.

Advertisment

இந்த சம்பவம் காரணமாக செந்தில் குமாரின் நெருங்கிய நண்பர்கள் வட்டாரத்திலும், ஊர் பெரியவர்கள் ஊர் பொது மக்களையும் பல்வேறு கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர் வடலூர் காவல் துறையினர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.