பேரூராட்சி செயலாளர் 25 ஆயிரம் லஞ்சம் வாங்கியதால் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது...

கடலூர் மாவட்டம் வடலூரில் தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலரிடம் மோகன்தாஸ் என்பவர் ரூபாய் 25,000 லஞ்சமாக பணம் கொடுக்கும் போது கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் செயல் அலுவலர் சக்ரவர்த்தியை கைது செய்தனர்.

vadalur incident

இதற்கு முன்னதாக மோகன்தாஸ் தன் வீட்டுமனைக்கு ஒப்புதல் வாங்குவது சம்பந்தமாக பேரூராட்சியின் செயல் அலுவலரிடம் அனுகியுள்ளார். அவர் அந்த வேலையை முடிப்பதற்காக ரூபாய் 25,000 லஞ்சம் கேட்டுள்ளார். அதனை தொடர்ந்து கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் மோகன்தாஸ் கொடுத்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின்படி இன்று காலை ரசாயனம் தடவிய பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் மோகன்தாஸிடம் கொடுத்தனர்.

மோகன்தாஸ் தனிநபர் செயல் அலுவலரிடம் கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக செயல் அலுவலர் சக்கரவர்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் செயல் அலுவலர் சக்கரவர்த்தியை கைது செய்து கடலூர் கொண்டு செல்லப்பட்டார். மேலும் சோதனையில் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் மெல்வின் ராஜாசிங் தலைமையில் காவல் ஆய்வாளர் திருவேங்கடம் சண்முகம் ஆகியோர் அடங்கிய குழுக்களாக இன்று வடலூர் பேரூராட்சியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

arrest Bribe Cuddalore
இதையும் படியுங்கள்
Subscribe