Advertisment

வடகாடு மோதல்; ஆட்சியர் நேரில் செல்லாதது ஏன்?- நீதிமன்றம் கேள்வி

Vadakadu Class; We Didn't Have the Collector Go in Person? - Court Justices

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வடகாடு கிராமத்தில் கோவில் பிரச்சனை கடந்த 5 ந் தேதி இரு தரப்பு இளைஞர்களின் வாய்த்தகராறு ஒரு தரப்பு குடியிருப்பு பகுதியில் மோதலாக வெடித்து 17 பேர் காயமடைந்தனர். வீடுகள், கார்கள், பைக்குகள் சேதமடைந்தது. இதனால் போக்குவரத்து முடக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தையடுத்து ஒரு தரப்பில் 21 பேரும் மற்றொரு தரப்பில் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து 8 பேர் என மொத்தம் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மோதலுக்கு காரணமான சம்பந்தப்பட்ட அனைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தொடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.'கோவிலுக்கு அருகில் உள்ள இடத்தில் யார் அதிகாரம் செலுத்துவது என்பதை பிரச்சனைக்கு காரணம் என அரசு தரப்பு தெரிவித்தது.

nn

Advertisment

இந்த சம்பவம் தொடர்பாக ஏன் மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தவில்லை என நீதிமன்றம் ஆட்சியருக்கு கேள்வி எழுப்பியுள்ளது. கோவில் மற்றும் பிரச்சனை நடந்த இடத்தின் சிசிடிவி காட்சிகளை சமர்ப்பிக்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், மே மாதம் நான்காம் தேதி முதல் ஏழாம் தேதி வரையிலான சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என இந்த வழக்கில் உத்தரவிட்டுள்ளது.

Chennai madurai high court Pudukottai Vadakadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe