ADVERTISEMENT

வடையால் வளர்ந்த கடையில் 'வடை தினம்' கொண்டாட்டம்!

07:49 PM Dec 04, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிதம்பரம் நகரத்திற்கு உட்பட்ட தெற்கு வீதியில் கடந்த 50-ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீனிவாச ஐயர் என்பவர் தெருவோரத்தில் தள்ளுவண்டியில் வடை சுட்டு வியாபாரம் செய்து வந்துள்ளார். அப்போது இவரது கடையில் விற்பனை செய்யப்படும் வடையை வாங்குவதற்காக வாடிக்கையாளர்கள் காத்திருந்து வடையை வாங்கி சென்றுள்ளனர்.

அப்படி வடையை விற்று வளர்ந்த கடை இன்று சண்முக விலாஸ் என்ற பெரிய ஸ்வீட் கடையாக வளர்ந்துள்ளது. இந்நிலையில் கடந்த 3 வருடத்திற்கு முன்பு இந்த கடையை நிறுவிய ஸ்ரீனிவாச ஐயர் காலமானார். டிசம்பர் மாதம் முதல் சனிக்கிழமையில் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் வடையால் வளர்த்த கடையின் நிறுவனர் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் 'வடை தினம்' அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் சனிக்கிழமை 3-வது ஆண்டு நினைவு நாளையொட்டி 'வடை தினம்' கடையின் வாயிலில் நடைபெற்றது. அன்று ஒரு நாள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இலவசமாக ரூபாய் 7 மதிப்புள்ள 10 ஆயிரம் வடைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கினர். ஒருவர் எத்தனை வடை வேண்டுமானாலும் சாப்பிடலாம் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். ஆனால் பார்சல் எடுத்துப்போக அனுமதி இல்லை. இந்நிகழ்ச்சியில் கடையின் உரிமையாளரும் அவரது மகனுமான கணேஷ் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வடைகளை வழங்கினார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT