Vaccination work was carried out in Trichy ..!

திருச்சியில் இன்று (18.06.2021) ஐந்துக்கும் மேற்பட்ட பகுதிகளில் கரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. அதில், திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் நடைபெற்ற தடுப்பூசி போடும் முகாமில் ஆயிரம் தடுப்பூசிகள் (கோவிஷீல்டு) கையிருப்பு இருந்தது. அதனைத் தொடர்ந்து ஆண்கள், பெண்கள் என சுமார் 2,000 பேர் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொ்ளள குவிந்தனர்.

Advertisment

Vaccination work was carried out in Trichy ..!

Advertisment

தடுப்பூசி போடும் இடங்களில் பொதுமக்கள் தனிமனிதஇடைவெளியைப் பின்பற்றாமல் முண்டியடித்துக்கொண்டு தடுப்பூசி போட காத்திருக்கின்றனர். தடுப்பூசி போடப்படும் ஒவ்வொருவருக்கும் மருத்துவர்கள் அறிவுரை கூறுவதோடு, ஊசி போட்டுக்கொள்ளும் பொதுமக்களில்சிலருக்கு தடுப்பூசியின் தாக்கத்தால் மயக்கம், வாந்தி உள்ளிட்ட பிரச்சினைகள்இருப்பதால், ஊசி போடும் இடங்களில் மருத்துவர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.