Advertisment

"தடுப்பூசி பணி: 13 சுகாதார மாவட்டங்களில் திருப்தி இல்லை" - மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் கடிதம்!

publive-image

Advertisment

தமிழ்நாட்டில் 13 சுகாதார மாவட்டங்களில் கரோனா தடுப்பூசிபோடும் பணிகள் குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அதிருப்தி தெரிவித்துள்ளார். மேலும், கரோனா தடுப்பூசிபோடும் பணிகளை விரைவுபடுத்திடுமாறு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.

கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் தீவிரமாக முன்னெடுத்துள்ள தமிழ்நாடு அரசு, கடந்த மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம்களை நடத்தியது. மேலும், தடுப்பூசிபோடாதவர்களைக் கண்டறிந்து அறிவுறுத்திடும் பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 45 சுகாதார மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய சுகாதார மாவட்டங்களில் தடுப்பூசிபோடும் பணிகள் மிகச் சிறப்பாக உள்ளது. விருதுநகர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, கடலூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, அறந்தாங்கி, அரியலூர், வேலூர், ராமநாதபுரம், விழுப்புரம் ஆகிய சுகாதார மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் திருப்தியாக இல்லை. எனவே, தடுப்பூசி செலுத்தும் பணிகளில் பின்தங்கிய சுகாதார மாவட்டங்களில், அப்பணிகளைத் தீவிரப்படுத்துமாறு அறிவுறுத்தி அம்மாவட்ட ஆட்சியர்களுக்குத் தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

District Collectors coronavirus vaccine Chief Secretary
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe