தமிழகம் முழுவதும் 15 வயதிற்கு மேற்பட்ட 18 வயதிற்கு கீழ் உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கான தடுப்பூசி போடும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக திருச்சி மாநகராட்சி சார்பில் மாற்றுத்திறனாளிகள், மாணவ மாணவிகளுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.
அதில் அறிவுசார் குறைபாடுள்ள 14 வயதுக்கு மேற்பட்ட தங்கி கல்வி மற்றும் தொழிற்கல்வி பயிலும் மாணவிகளுக்கும், 14 வயதுக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் 11 மாணவிகள் 12 மாணவர்கள் உள்பட மொத்தம் 23 மாணவ மாணவிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.