தமிழ்நாட்டில் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு நோய்த் தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசின் சார்பிலும், மருத்துவர்கள் தரப்பிலும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டுவருகிறது. ஆனால், தடுப்பூசி செலுத்திக்கொள்ள பலரது மத்தியிலும் அச்சம் இருந்துவந்த நிலையில், தடுப்பூசி செலுத்துபவர்களின் எண்ணிக்கை குறைந்தே காணப்பட்டது.

Advertisment

மேலும், கடந்த சில நாட்களாக தடுப்பூசி தட்டுப்பாடும் ஏற்பட்டது. ஆனால் தற்போது தமிழ்நாடு அரசின் தீவிர நடவடிக்கையின் அடிப்படையில் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம்கள் நடைபெற்றுவருகிறது. அந்த வகையில், நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களுக்குத் தடுப்பூசி போடப்படுகிறது. இதனை அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், பொன்முடி ஆகியோர் துவக்கிவைத்தனர்.