/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_1302.jpg)
கரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய 2 வகையான தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் அரசு ஆரம்ப சுகாதாரம் நிலையம் சார்பில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக செட்டிக்குளம் - பெரகம்பி செல்லும் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் செயல்படும் 100 நாள்கள் வேலை நடைபெறும் இடத்தில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அங்கு தனிமனித இடைவெளி கடைப்பிடித்தும், முகக்கவசம் அணிந்தும் வந்த நபர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டன.
இந்நிகழ்வில் மருத்துவர் சூர்யா, கிராமப்புற செவிலியர் வனிதா, சுகாதார ஆய்வாளர் ஆனந்த், மருத்துவ பணியாளர்கள் மற்றும் பள்ளி தாளாளர் மணிகாந்த், செட்டிகுளம் லயன்ஸ் கிளப் முன்னாள் செயலாளர் ஆறுமுகம், நிர்வாக அலுவலர் ரெங்கராஜ், அடக்குநர் சத்தியன், வீரசத்யா, சீனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செட்டிகுளம் லயன் சங்கம் சார்பில் அனைவருக்கும் முகக் கவசம், பிஸ்கட் வழங்கப்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)