/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_1640.jpg)
நாகை மாவட்டம், தோப்புத்துறையில் இன்று (26.08.2021) மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கரோனா தடுப்பூசி முகாம் முன்னெடுக்கப்பட்டது.காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை நடந்த முகாமில் 'கோவிஷீல்ட்' தடுப்பூசி செலுத்தப்பட்டது.இதில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டு தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர். இவர்களில் பெரும்பாலானோர் முதல் டோஸ் போட வருகை தந்திருந்தனர். மஜக சார்பில் நடத்தப்பட்ட இந்த தடுப்பூசி முகாமில் பலர் தடுப்பூசி செலுத்திகொண்டனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_413.jpg)
இதில் மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் மா.மீ. அன்பரசு, வேதாரண்யம் வட்டார சுகாதாரத்துறை மருத்துவ அலுவலர் Dr. ராஜசேகர், மஜக மாவட்ட துணைச் செயலாளர் S. ஷேக் அகமதுல்லா, தலைமை செயற்குழு உறுப்பினர் அ. ஷேக் மன்சூர், நகரச் செயலாளர் H. முகம்மது சரிபு, நிர்வாகிகள் A. அல்டாப் பாரக், S. இம்தியாஸ், முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)