தமிழ்நாட்டில் தொடர்ந்து கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுவருகிறது. அதேசமயம், சில நேரங்களில் தடுப்பூசி பற்றாக்குறையின்போது முகாம்கள் இயங்காமல் தடுப்பூசி போடும் பணி நிறுத்திவைக்கப்படுகிறது. மேலும், சில இடங்களில் முதல் தவணையும் சில இடங்களில் இரண்டாம் தவணையும் போடப்படுகிறது.

Advertisment

இந்நிலையில், இன்று (21.07.2021) சென்னை, தேனாம்பேட்டை இளங்கோ தெருவில் மாநகராட்சி சார்பில் கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை ஊசியை செலுத்திக்கொண்டனர்.

Advertisment