Vaaitha film Actress powlen jessica Deepaa passed away in her home

சென்னைவிருகம்பாக்கம்பகுதியில் வசித்துவந்தவர் நடிகைபவுலின்எனும் தீபா. இவர் அதே பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் தனியாக வசித்துவந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை அவரது உறவினர்கள் அவரைசெல்போன்மூலம் தொடர்புகொள்ளமுயற்சித்தபோதுஅவர்செல்போன்எடுக்கவில்லைஎனகூறப்படுகிறது. இதனால் உடனடியாக அவரதுநண்பரைதொடர்பு கொண்டு இந்தவிஷயத்தைசொல்லி நேரில் சென்றுபார்க்கசொன்னதாகவும் சொல்லப்படுகிறது.

Advertisment

அப்படிதீபாவின்நண்பர் அவரதுவீட்டிற்குசென்று பார்த்தபோது, அவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருந்தது தெரியவந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்,தீபாவின்உறவினர்களுக்குதகவல் தெரிவித்துள்ளார். மேலும், காவல்நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் இவரதுதற்கொலைக்குகாதல் விவகாரம் காரணம்எனதெரிவிக்கின்றனர்.

Advertisment

சமீபத்தில் வெளியான வாய்தா என்ற படத்தில் கதாநாயகியாகவும், துப்பறிவாளன் மற்றும் பல படங்களில் துணை நடிகையாகவும்பவுலின்எனும் தீபா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.