







Published on 05/09/2021 | Edited on 05/09/2021
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150- வது பிறந்தநாளையொட்டி, சென்னை, இராஜாஜி சாலை, துறைமுகம் வளாகத்தில் அமைந்துள்ள வ.உ.சி.யின் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வ.உ.சிதம்பரனாரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், முன்னாள் தமிழக பாஜக தலைவரும் மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமிழக காங்கிரசை சேர்ந்த தங்கபாலு ஆகியோர் வ.உ.சிதம்பரனாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.