ஹத்ராஸ் இளம்பெண்ணின் மீதான வன்கொடுமை, படுகொலைக்கு பொறுப்பேற்று உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும். பாலியல் வன்கொடுமை, படுகொலை செய்த குற்றவாளிகளுக்கும் கடும் தண்டனை வழங்கு வேண்டும்.
மாவட்ட போலீஸ் அதிகாரி, நீதிபதி உள்ளிட்ட அனைவரையும் வேலை நீக்கம் செய்ய வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
“ராஜபாளையம் நாய்கள், தஞ்சாவூர் பொம்மை பற்றி பேசும் பிரதமர் மோடியே உத்தரபிரதேசத்தில் தொடரும் பெண்கள், தலித்துகள் மீதான வன்கொடுமைகளுக்கு பதில் சொல்ல வேண்டும்”எனஇந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) - அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் இணைந்து நேற்று மாலை 3.30 மணியளவில் செஞ்சி தலைமை மாவட்ட தலைவர் சுசீலா முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.