Advertisment

கிராமங்களில் உதயசூரியன் சின்னம்! தேர்தல் களத்தில் குதித்த திமுக!!

பாராளுமன்ற தேர்தலையொட்டி ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தல் பொறுப்பாளர்களைதலைவர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

Advertisment

dmk

அதுபோல் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு சாமிநாதனை நியத்திருக்கிறார். அதன் அடிப்படையில் திண்டுக்கல்லுக்கு விசிட் அடித்து கழக துணை பொதுச் செயலாளரும், முன்னாள் முப்பெரும் துறை அமைச்சரான ஐ.பி.யிடம் அலோசனை நடத்தினார்.

அதன்பின் கிழக்கு மாவட்ட செயலாளரும். பழனி சட்டமனற உறுப்பினருமமான ஐ.செந்தில்குமார் ஏற்பாடு செய்திருந்தநிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிலக்கோட்டை மற்றும் வத்தலக்குண்டில் தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டத்தில் சாமிநாதன் மற்றும் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisment

dmk

இதில் ஒன்றிய பகுதிகளில் உள்ள 37 ஊராட்சிமன்ற பொறுப்பாளர்களையும் மற்றும் 5 பேரூராட்சிகளுக்கு பொறுப்பாளர்களையும். கிளை பொறுப்பாளர்களையும்நியமித்தனர். அதோடு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக இடைத்தேர்தல் வந்தாலும் வரலாம் என்றுஅதற்கும்சேர்த்து இந்த தொகுதியில் இருக்க கூடிய கட்சி பொறுப்பாளர்கள் பணியாற்றுங்கள் என்று உறுப்பினர்களை உசிப்பிவிட்டதுடன் மட்டும்மல்லாமல் அங்கங்கே இடங்களை பிடித்து சின்னங்களையும் வரையுங்கள் என உத்திரவிட்டார்.

அதன் அடிப்படையில்மறுநாளே வத்தலக்குண்டு ஒன்றிய செயலாளர் முருகன் கிளை பொறுப்பாளர்களை உசிப்பி விட்டு சின்னம் வரைய சொன்னதின் பேரில்உறுப்பினர்களும்பழைய வத்தலக்குண்டு, கணவாய்பட்டி, விராலிப்பட்டி, கோம்பைபட்டியில் உள்ளவீடு பகுதிகளில் உள்ள வீட்டு சுவர்களில் உதயசூரியன் சின்னம் வரைந்து வருகிறார்கள்.

அதை தொடர்ந்து மற்ற பகுதிகளிலும் கூடிய விரைவில்சின்னம் வரைய தயாராகி வருகிறார்கள்.இப்படி பாராளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலுக்காக முன் கூட்டியே தேர்தல் களத்தில் திமுக தான் குதித்து பணிகளை தொடங்கியுள்ளது.

elections
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe