திருச்சி மாவட்டம், சமயபுரம் சொக்கலிங்கபுரம் காலனி பகுதியில் வசிப்பவர் பாலவெங்கட்ராமன். இவரது மகன் சுந்தர கணேசன்(52). இவர் அப்பகுதியில் உள்ள ஹோட்டலில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி. செல்வி் வீட்டிலேயே முறுக்கு, அதிரசம் போன்ற தின்பண்டங்களை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்.
இவர் இப்பகுதியில் உள்ள புதுத்தெருவில் வசிக்கும் பஞ்சவர்ணம் என்பவரிடம் கந்து வட்டிக்கு ரூபாய் 2000 பணம் வாங்கியுள்ளார். தினமும் ரூபாய் 20 வீதம் மாதம் ரூபாய் 600 வீதம் வட்டி கொடுத்துள்ளார். இந்த பணம் வட்டி அதிகமாகி ரூபாய் 7000 வரை சென்றுள்ளது. வியாபாரம் சரியில்லாததால் வட்டி பணம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Trichy_Central_Bus_Station.jpg)
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பஞ்சவர்ணம் தன் மகன் புயல் புருதோத்தமனுடன் வந்து சுந்தரகணேசனையும், அவரது மனைவியையும் தகாத வார்த்தைகளால் திட்டியும், செருப்பால் அடித்தும், சட்டையை கோத்துப் பிடித்து இரண்டு நாட்களுக்குள் பணம் தாராவிட்டால் நடப்பதே வேறு என்று மிரட்டி விட்டு சென்றுள்ளார். இதனால் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளான சுந்தரகணேசன் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சமயபுரம் புள்ளம்பாடி வாய்க்கால் புதுப்பாலத்தில் உள்ள கட்டையில் தூக்கிட்டு வாய்க்காலில் குதித்துள்ளார். இதில் கழுத்தில் கயிறு இறுகிய நிலையில் உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த சமயபுரம் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கு காரணமான பஞ்சவர்ணத்தினை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தப்பியோடிய புயல் புருசோத்தமனை போலீசார் தேடி வருகின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/TRICHY111.jpg)
இதற்கிடையில் பாலவெங்கடன்ராமன் தன்னுடைய சட்டை பையில். என் தற்கொலைக்கு காரணம் கந்துவட்டி கொடுமை என்று கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)