Usury case  High Court Madurai Branch action order

Advertisment

கந்துவட்டி தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கந்துவட்டிக்காக நிறுவனத்தைக் கேட்டு மிரட்டியது தொடர்பான வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில், “ ரூ. 2 லட்சம் கடன் வாங்கியதற்காக ரூ. 2 கோடி வரை கொடுத்துள்ளேன்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (16.08.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “தென்மாவட்டங்களில் கந்துவட்டி பிரச்சினையில் ஏராளமான உயிர்கள் பலியாகியுள்ளன. கந்து வட்டி கும்பல் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் ஆகும்” எனத் தெரிவித்தார். மேலும் கந்து வட்டி தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.