தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு, சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்புமனுத் தாக்கல் என அனைத்தையும் முடித்து தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. வாக்குப்பதிவு நாளுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் பிரச்சாரக் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், மதுரை உசிலம்பட்டியில் திமுக பணப்பட்டுவாடா செய்வதாகப்புகார் எழுந்தநிலையில், உசிலம்பட்டிஅருகேமாமரத்துப்பட்டியில்காருடன் 23,300 ரூபாய் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காரில் இருந்த சிலர் தப்பியோடியநிலையில் இதுதொடர்பாகஇருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மெய்யப்பனபட்டிதிமுகவை சேர்ந்த பிரகாஷ்,பெரிய செம்மேட்டுபட்டியைச் சேர்ந்த பிரவின்என்ற இரண்டு பேரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.