அரசு மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளை அனுமதிப்பது குறித்து விளக்கம் அளித்துள்ள மருத்துவத்துறை, "தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைபெற, படுக்கை வசதி உள்ளதா என்பதை அறிந்தபிறகே நோயாளிகளை அழைத்து வர வேண்டும். https://tncovidbeds.tnega.org/ என்ற இணையதளத்தில் கரோனா படுக்கைகளின் இருப்பை சரிபார்க்கலாம். படுக்கை வசதி நிலை அறிந்துவந்தால் ஆம்புலன்ஸ்களில் காத்திருக்கும் நிலை தவிர்க்கப்படும். கரோனா நோயாளிக்கு உதவ ஒருவர் மட்டுமே உடனிருக்க அனுமதிக்கப்படுவர். நோயாளியுடன் உடன் இருக்கும் நபர் மருத்துவமனை வளாகத்தில் இருந்து வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளது.