Advertisment

விஜய பிரபாகரனுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பு வழங்க வலியுறுத்தல்...!

தே.மு.தி.கவின் 16 ஆவது ஆண்டு துவக்க நாளான இன்று காலை அக்கட்சியின் தலைவரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்த், கோயம்பேட்டில் அமைந்துள்ள தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். இந்நிகழ்ச்சியின்போது புதிதாக 100 இளைஞர்கள் தே.மு.தி.கவில் இணைந்தனர். அவர்களை வரவேற்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உரையாற்றினார். அவரை தொடர்ந்து விஜய பிரபாகரனும் உரையாற்றினார்.

Advertisment

இந்நிகழ்ச்சியில் தே.மு.தி.கமாவட்ட, வட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியின்போது அக்கட்சி நிர்வாகிகள், கடந்த இரண்டு வருடமாகவே விஜய பிரபாகரன் கட்சி செயல்பாடுகளில் அதிக ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவராக இருந்துவருகிறார். அவருக்கு பொறுப்பு வழங்கினால் நிச்சயம் இணைந்து செயல்படுவோம் என்றும் அவருக்கு கட்சியில் முக்கியப் பொறுப்பு வழங்க வலியுறுத்துவோம் என்றும் தெரிவித்தனர்.

Advertisment

மேலும், விஜய பிரபாகரனுக்கு 2021 சட்டமன்றத் தேர்தலுக்குள் கட்சியில் முக்கியப் பொறுப்பு வழங்கவிருப்பதாக தே.மு.தி.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

dmdk premalatha vijayakanth vijayakanth
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe