Advertisment

பல்கலைக்கழக பேராசிரியர் பணி நியமனத்தில் பாராளுமன்ற சட்டத்தை கடைபிடிக்க வலியுறுத்தல்!

fgjh

பல்கலைக்கழக பேராசிரியர் பணி நியமனத்தில் பாராளுமன்ற சட்டத்தை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு பல்கலைக்கழக மற்றும் கல்லூரி எஸ்சி எஸ்டி ஆசிரியர் சங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளது.

Advertisment

தமிழ்நாடு பல்கலைக்கழக மற்றும் கல்லூரி எஸ்சி எஸ்டி ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கண்ணையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசுகையில், " இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதலின்படி இயங்கிவருகின்றது அதேபோல ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள பல்கலைக்கழகங்களும் இந்த மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் நிலையில் இட ஒதுக்கீடு கொள்கையை மத்திய அரசுக்கு புறம்பாக மாநில அரசு பல்கலைக்கழகங்கள் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர் இணைப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் அழகிய காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும்போது அந்தத் துறையை ஒரு அலகாக கொண்டு சுழற்சி முறையில் இட ஒதுக்கீடு செயல்படுத்தப்பட்டு வந்தது.

Advertisment

ஆனால் குறிப்பாக பட்டியலின மக்களுக்கு எந்தப் பல்கலைக் கழகங்களிலும் பேராசிரியர் பணி நியமனங்களில் பொதுப்பிரிவு பணியிடங்களில் பணிய மறுத்தது கிடையாது இதனால் கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு பாராளுமன்றத்தில் ஒரு சட்டத்தை இயற்றினார் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியர் பணி நியமனங்களின் போது ஒட்டுமொத்த பல்கலைக்கழகம் அல்லது உயர் கல்வி நிறுவனத்தையும் பணியிடங்களை ஒரே அலகாக எடுத்துக் கொண்டு பேராசிரியர் நியமனத்தில் இட ஒதுக்கீடு பின்பற்ற வேண்டும் என்று அந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

அதன்படி தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் இந்த பாராளுமன்ற சட்டத்தை செயல்படுத்தினால் பல்கலைக் கழகங்களில் காலியாக உள்ள அனைத்து பேராசிரியர் பணியிடங்களை மொத்தமாக எடுத்து அதில் இட ஒதுக்கீடு முறையை பின்பற்றினால் அனைத்து இன மக்களுக்கும் இட ஒதுக்கீடு கிடைக்கும் ஆனால் கடந்த 2014ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தால் 22 பேராசிரியர் பணியிடங்களுக்கான விளம்பரம் தமிழகத்தில் உள்ள நாளிதழ்களில் வெளிவந்தது இதில் 3 பேர் பேராசிரியர் பணியிடங்கள் பொதுப்பிரிவினருக்கு என்றும் மீதமுள்ள 19 பேராசிரியர் பணியிடங்கள் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு இட ஒதுக்கீடு இல்லாத பணி என்று விளம்பரம் வந்துள்ளது.

அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைகழகம் இணைந்து உயர்கல்வித் துறைச் செயலர் மூலம் ஒரு அறிக்கையை பெற்று அந்த அறிக்கையானது மத்திய கல்வி நிறுவனம் சட்டம் 2019 மத்திய பல்கலைக்கழகம் மட்டும்தான் செல்லும் என்றும் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் பழைய விதியின் வழியே செயல்படலாம் என ஒரு அறிவுரையை பெற்று உள்ளது ஆகையால் உயர்கல்வித் துறையின் இந்த கடிதத்தை கொண்டு பாரதிதாசன் பல்கலைக்கழகம் அனைவருக்குமான இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்து பாரதிதாசன் பல்கலைக் கழகத்துக்கு எதிராக வெற்றியும் பெற்றது. எனவே தமிழக அரசு விரைவில் மத்திய அரசினுடைய இந்தப் பல்கலைக் கழக சட்டத்தை அனைவருக்கும் தெளிவுபடுத்தி பல்கலைக் கழகங்களில் காலியாக இருக்கக்கூடிய பேராசிரியர் பணியிடங்கள் இணை பேராசிரியர்கள் உதவி பேராசிரியர்கள் என அனைத்திலும் முழுமையான இட ஒதுக்கீட்டை பின்பற்றினால் 200 புள்ளி இன சுழற்சி அடிப்படையில் அனைத்து வகுப்பினருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் இது குறித்த விரிவான அறிக்கையை தராத பட்சத்தில் தங்களுடைய தமிழ்நாடு பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஏடிஎஸ்பி ஆசிரியர் சங்கம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும்" என்றும் அறிவித்துள்ளனர்.

college
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe