தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் முதல்வருக்கு அனுப்பியுள்ள அவசர மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
கடந்த 22ந்தேதி முதல் ஜாக்டோஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை மேற்கொண்டுள்ளனர். அதையடுத்து கடந்த ஒருவாரகாலமாக பகுதிநேர ஆசிரியர்களே திறந்து நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vx.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இவர்கள் வாரத்தில் 3 அரைநாட்கள் என மாதத்தில் மொத்தம் 12 அரைநாட்கள் பள்ளிக்கு வருகை புரிந்து ஆறு முதல் எட்டு வகுப்பு மாணவர்களுக்கு கணினி, உடற்கல்வி, ஓவியம், இசை, தையல், தோட்டக்கலை, வாழ்வியல்திறன் போன்ற கல்வி இணைச் செயல்பாடுகளை போதித்து வருவதற்காக நியமிக்கப்பட்டவர்கள். 16549 பேரில் தற்போது 12637 பகுதிநேர ஆசிரியர்களே பணிபுரிந்து வருகின்றனர் .
2012ல் ரூ.5000 தொகுப்பூதியத்தில் பணியில் அமர்த்தப்பட்ட இவர்களுக்கு ரூ.7700 என குறைந்த சம்பளமே தரப்பட்டு வருகிறது. இப்போதுள்ள பகுதிநேர வேலையால் எங்களின் மீதி நேரமும் உரிய ஊதியமின்றி சுரண்டப்படுகிறது. ரூ.7700 சம்பளத்தில் பள்ளிக்கு சென்றுவர பேருந்து கட்டணம், வண்டி பெட்ரோல் செலவு, சாப்பாடு, டீ செலவுகளைகூட செய்யமுடியவில்லை. குழந்தை குட்டிகளோடு குடும்பத்தையும் இந்த சம்பளத்தில் கவனிக்க முடியவில்லை.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vx1.jpg)
இவர்களுக்கு 7வது ஊதியக்குழுவின் 30% ஊதிய உயர்வு அமுல்செய்யவில்லை. மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியத்தையும் அமுல் செய்யவில்லை. மேலும், ஒப்பந்த வேலையில் உள்ளவர்களுக்கு சட்டபடி வருடாந்திர 10% ஊதிய உயர்வு, P.F., E.S.I., போனஸ் போன்றவை நடைமுறைப்படுத்தவில்லை.
குறைந்த ஊதியத்தில் அரசின் பணபலன்களை எதுவும் பெறமுடியாமல் தவிக்கும் இவர்களை பகுதிநேரம் போக இதர நேரங்களை பெரும்பாலான பள்ளிகளில் எல்லா வகையான பணிகளிலும் ஈடுபடுத்தி வருகின்றனர். ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகளிலும், ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கும்போதும் இவர்கள் இதர பாடங்களை நடத்தி மாணவர்களுக்கு கல்வி பயின்று வருகின்றனர்.
வேலைநிறுத்த போராட்ட காலங்களில் மாற்று ஏற்பாடாக அரசு இப்பகுதிநேர ஆசிரியர்களையே 2015 முதல் பயன்படுத்தி வருகிறது.
தற்போதும் இயக்கப்பட்டுவரும் பள்ளிகள் அனைத்துமே இப்பகுதிநேர ஆசிரியர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கென தனியே சம்பளம் எதுவும் வழங்காவிட்டாலும் முறைப்படி முழுநேரவேலையில் அரசு தங்களை அமர்த்திட வேண்டும் என கேட்டுவருகின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vx2.jpg)
8 வருடமாக பள்ளிகளை நடத்தும் அனுபவம், 4 வருட வேலைநிறுத்த போராட்டங்களின் போது பள்ளிகளை திறம்படி நடத்திய அனுபவமும் உள்ளது. இந்நிலையில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ரூ.10000 சம்பளத்துடன் முழுநேர வேலை கொடுங்கள் எனக் கேட்டு வருகிறார்கள். பள்ளி நடத்தும் அனுபவமும், கல்வித் தகுதியும் உள்ள பகுதிநேர ஆசிரியர்கள் இருக்கும்போது ஏன் புதிதாக தற்காலிக ஆசிரியர்களைரூ.10000 சம்பளத்தில் பணி அமர்த்த வேண்டும்.
எனவே அவசர காலங்களில் அரசுக்கு கை கொடுக்கும் எங்களுக்கு முதல்கட்டமாக முழுநேரவேலையாவது கொடுங்கள். எனவே புதிதாக வேலைக்கு ஆள்தேடும்போது எங்களை ஏன் தேர்வு செய்யக்கூடாது?. வேலைநிறுத்தம் நடக்கும்போது மட்டுமின்றி அனைத்து வேலைநாட்களிலும் முழுநேர வேலை கொடுங்கள், இப்போதைக்கு இந்த ரூ.10000ஐ பகுதிநேர ஆசிரியர்களுக்கே கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம். எங்களில் 90% பேர் திருமணமானவர்கள், ஏழை விவசாயக் குடும்பத்தினர்கள்தான். எனவே கருணை காட்டுங்கள். நல்ல வழிகாட்டுங்கள் எங்களுக்கு என்றுதானே கேட்கிறோம்.
யாராக இருந்தாலும் தகுதித்தேர்வு தேர்ச்சி பெற்றால்தான் ஆசிரியர் பணி வழங்கப்படும் என்று கல்விஅமைச்சர் சமீபத்தில் அறிவித்துள்ளார். ஆனால் இப்போது அனுபவம், கல்வித்தகுதி பார்க்காமல்,ஓய்வு பெற்றவர்களைகூட இந்த ரூ.10000 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமன அறிவிப்பு அமைச்சரின் அறிவிப்புக்கு நேர்எதிராக உள்ளது.
பல வருடமாக பள்ளிகளை கவனித்து வரும் பல்வேறுவகை 12000 பகுதிநேர ஆசிரியர்களை முதலில் முழுநேர ஆசிரியராக அறிவிப்பினை இந்த தருணத்தில் அறிவியுங்கள்.இவ்வாறு முதல்வருக்கு அவசர கோரிக்கையாக வேண்டுகோள் வைத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)