Urgent need .. Send money ... Online fraud in the name of police officers ..!

Advertisment

இப்படியும் ஏமாற்ற வழி இருக்கின்றது என்பதனை அவ்வப்போது மக்களுக்கு உணர்த்தி வருகின்றனர் ஆன்லைன் திருடர்கள். அந்த வகையில் இப்பொழுது போலீசாரின் பெயரையே பயன்படுத்தி மக்களை ஏமாற்ற ஆரம்பித்திருப்பதுதான் மோசடியின் உச்சம்.

மதுரை மாவட்டத்தைச்சேர்ந்த போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் மணிமாறனின் பெயரைக் கொண்டு போலியாக ஒரு முகநூல் கணக்கைத் துவங்கி அதன் மூலம் அவரின் நண்பர்களிடம் இருந்து பணப் பறிப்பில் ஈடுபடுவதாக தெரியவந்தது.

இதுகுறித்து மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் சம்பந்தப்பட்ட எஸ்.ஐ.மணிமாறனிடம் பேசிய போது, "அந்தமுகநூல் கணக்கு என்னுடையது. ஆனால் எனது பெயரில் போலியாக வேறொரு முகநூல் கணக்கு துவங்கி இந்த மோசடியில் ஈடுப்பட்டுள்ளனர். 'நக்கீரனில்' செய்தி வந்த பிறகே இது குறித்து தெரிகிறது. எனினும் என்னுடைய நண்பர்கள் இதுகுறித்து கூறவில்லை." என்கிறார் அவர்.