Advertisment

"ஜூலை 3- ல் திமுக நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு"- அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு! 

publive-image

தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இன்று (16/06/2022) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பொறுப்பேற்றுள்ள நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடு, கட்சியின் முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு, முன்னிலையில் கட்சியின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஜூலை மாதம் 3- ஆம் தேதி அன்று, காலை 09.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை, பொம்மகுட்டை, நாமக்கல்லில் நடைபெறும். இந்த மாநாட்டில், பல்வேறு தலைப்புகளின் கீழ் பேச்சாளர்கள் சிறப்புரையாற்றவுள்ளார்கள்.

Advertisment

கட்சி சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குப் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள், நகர்ப்புற உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் என அனைவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் இணைக்கப்பட்டுள்ள அனுமதி பேட்ஜ் பெற்று, இம்மாநாட்டில் கலந்துக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

statement duraimurgan minister
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe