நகரப்புற உள்ளாட்சித் தேர்தல்- வேட்பாளர் பட்டியலைத் தொடர்ந்து வெளியிடும் அரசியல் கட்சிகள்!

Urban Local Government Elections - Political Parties Following the Candidate List!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் விறுவிறுப்பு அடைந்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தொடர்ந்து வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதேபோல், மாநகராட்சி, நகராட்சிகளில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அ.தி.மு.க. வெளியிட்டுள்ளது. அதன்படி, சேலம், ஆவடி, திருச்சி, மதுரை, சிவகாசி, தூத்துக்குடி, தேனி, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஈரோடு, அரியலூர், நாகை, மயிலாடுதுறை, சிவகங்கை, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்ட மாநகராட்சி, நகராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் 6- வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

admk
இதையும் படியுங்கள்
Subscribe