Urban local elections: AIADMK participants in the interview

Advertisment

முசிறி நகராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான நேர்காணல் தொடங்கியது. திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி தலைமை வகித்தார்.

முசிறியில் உள்ள 24 வார்டுகளில் போட்டியிட 74 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. முசிறி நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள் உள்ளன முசிறி நகராட்சியில் 12 ஆயிரத்து 912 ஆண் வாக்காளர்களும், 14208 பெண் வாக்காளர்களும் 13 இதர வாக்காளர்களும் சேர்த்து 27, 023 வாக்காளர்கள் உள்ளனர். 24 வார்டுகளுக்கும் போட்டியிட அதிமுக கட்சியின் சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம் மாவட்ட செயலாளர் பரஞ்சோதி நேர்காணல் நடத்தி தேர்வு செய்தார். அப்போது கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.