தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்தது.

Advertisment

649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜனவரி 28- ஆம் தேதி அன்று முதல் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய நிலையில் இன்று (04/02/2022) மாலை 05.00 PM மணிக்கு வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து, வேட்பு மனு மீதான பரிசீலனை நாளை (05/02/2022) நடைபெறுகிறது. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கு கடைசி நாள் வரும் பிப்ரவரி 7 ஆகும். அதன் பின்னர், பிப்ரவரி 8- ஆம் தேதி அன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் பிப்ரவரி 19- ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 22- ஆம் தேதி அன்று எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.

மாநகராட்சி தேர்தலுக்கு 6,818 பேரும், நகராட்சித் தேர்தலில் போட்டியிட 12,171 பேரும் இதுவரை வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். பேரூராட்சித் தேர்தலில் போட்டியிட தமிழகம் முழுவதும் 20,847 வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisment