
ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஆர்.எஸ்.கொளத்துப்பாளையம் காலனியைச் சேர்ந்த சசிக்குமார் மகள் அமிர்தவர்ஷினி (23). இவர்ஐ.எம்.எஸ்.சி படித்து விட்டுயு.பி.எஸ்.சி தேர்வுக்கு படித்து வந்தார். கடந்த 2 ஆம் தேதி அமிர்தவர்ஷினி யு.பி.எஸ்.சி. அமலாக்கத்தேர்வு எழுதி வந்தார். தேர்வு கடினமாக இருந்ததாக அமிர்தவர்ஷினி அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதில் மன வேதனையிலிருந்த அமிர்தவர்ஷினிவீட்டின் அறையில் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைப் பார்த்த அவரது பெற்றோர் கதவை உடைத்து அமிர்தவர்ஷினியை மீட்டு பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு அமிர்தவர்ஷினி இறந்து விட்டதாகத்தெரிவித்தனர். இதுகுறித்து வெள்ளோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)